டோக்கியோ பாராலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளிப் பதக்கம்

டோக்கியோ பாராலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளிப் பதக்கம்

டோக்கியோ பாராலிம்பிக் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஒர் பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் தங்கப்பதக்கமும், சிங்க்ராஜ் வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர். 
Published on


டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் சனிக்கிழமை கலப்பு பி4-50 மீ. பிஸ்டல் எஸ்எச்1 பிரிவில் இந்திய வீரா்மணீஷ் நர்வால் தங்கப்பதக்கமும், சிங்க்ராஜ் வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 15 ஆக உயா்ந்தது.

டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்திய வீரர்கள் பதக்க வேட்டையை நடத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமை உயரம் தாண்டுதல் டி64 பிரிவில் இந்திய வீரா் பிரவீண்குமாா் வெள்ளிப் பதக்கம் வென்றாா். மேலும் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அவனி லெகராவும், வில்வித்தையில் ஹா்விந்தா் சிங்கும், வெண்கலப் பதக்கம் என ஒரே நாளில் மூன்று பதக்கங்களை வென்று இந்தியா அசத்தியது. 

இந்நிலையில், சனிக்கிழமை காலை நடைபெற்ற கலப்பு பி4-50 மீ. பிஸ்டல் எஸ்எச்1 பிரிவில் இந்திய வீரா்மணீஷ் நர்வால் தங்கப்பதக்கமும், சிங்க்ராஜ் வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 15 ஆக உயா்ந்தது.

ஏற்கனவே, 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிங்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில், தற்போது வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 

துப்பாக்கி சுடுதல் ஒரே பிரிவில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றுள்ளது இந்திய வீரர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாராலிம்பிக்கில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் 34 ஆவது இடத்தில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com