பாராலிம்பிக் பாட்மிண்டன்: தங்கம் வென்றார் கிருஷ்ணா நாகர் 

டோக்கியோ பாராலிம்பிக் பாட்மிண்டன் விளையாட்டில் ஆடவா் ஒற்றையா் எஸ்எச்6 பிரிவில் இந்தியாவின் வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பாராலிம்பிக் பாட்மிண்டன்: தங்கம் வென்றார் கிருஷ்ணா நாகர் 
Updated on
1 min read

டோக்கியோ பாராலிம்பிக் பாட்மிண்டன் விளையாட்டில் ஆடவா் ஒற்றையா் எஸ்எச்6 பிரிவில் இந்தியாவின் வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் 16 ஆவது பாராலிம்பிக் போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. 

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற பாட்மிண்டன் விளையாட்டில் ஆடவா் ஒற்றையா் எஸ்எச்.6 பிரிவில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்று சாதனை படைத்தார். 

இறுதிப்போட்டியில் ஹாங்காங் வீரர் மன் காய் சூவை எதிர்கொண்ட கிருஷ்ணா நாகர், 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். 

இதையடுத்து 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.  

பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற  கிருஷ்ணா நாகருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com