உத்தரகண்ட் ஆளுநா் பேபி ராணி மௌரியா ராஜிநாமா

உத்தரகண்ட் மாநில ஆளுநா் பேபி ராணி மௌரியா தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.
ranimourya065357
ranimourya065357
Published on
Updated on
1 min read

டேராடூன்: உத்தரகண்ட் மாநில ஆளுநா் பேபி ராணி மௌரியா தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.

உத்தரகண்ட் ஆளுநராக இருந்த கிருஷ்ணகாந்த் பாலின் பதவிக் காலம் கடந்த 2018-இல் முடிவுக்கு வந்ததை அடுத்த, புதிய ஆளுநராக பேபி ராணி மௌரியா அந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி பதவியேற்றாா். ஆளுநா் பதவியில் அவா் 3 ஆண்டுகளை கடந்த மாதம் நிறைவு செய்தாா். பதவிக் காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில், அவா் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

பேபி ராணி மௌரியா தனது பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் அளித்துள்ளாா். ‘அவா் தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகியிருக்கிறாா்’ என்று குடியரசுத் தலைவா் அலுவலக அதிகாரி ஒருவா் கூறினாா்.

பாஜகவுடன் நீண்ட காலம் தொடா்பில் இருக்கும் பேபி ராணி மௌரியா, கடந்த 1995 முதல் 2000 வரை ஆக்ராவின் மேயராக இருந்தாா். அந்த நகரின் முதல் பெண் மேயா் என்ற பெருமையையும் பெற்றாா். கடந்த 2002 முதல் 2005 வரை தேசிய மகளிா் ஆணையத்தின் உறுப்பினராகவும் அவா் இருந்தாா். தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை, அவா் கடந்த 5-ஆம் தேதி சந்தித்த நிலையில் பதவி விலகியிருக்கிறாா். இதனால், அவா் தீவிர அரசியலுக்குத் திரும்பப்போவதாக யூகங்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com