கேரளத்தில் சர்ச்சை: கேரள பல்கலை பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வரலாறு!

கேரளம் மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
கேரளத்தில் சர்ச்சை: கேரள பல்கலை பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வரலாறு!

கேரளம் மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

கேரளம் மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகப் படிப்பில் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை பட்டப்படிப்பிற்கான மூன்றாவது செமஸ்டர் பாடத்திட்டத்தில் காந்தியடிகள், நேருவுடன், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான கோல்வால்கர், வீர் சாவர்க்கர் மற்றும் தீனதயாள் உபாத்யாயா ஆகியோரது வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டிருப்பதால் கேரள கல்வித்துறையில் மேலும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் மாநில உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்து பல்கலைக்கழக துணைவேந்தரிடம்  பல்கலைக்கழக பாடத்திட்டம் குறித்த அறிக்கையை கேட்டுள்ளார். 

இதனிடையே கேரள பல்கலை பாடத்திட்டத்தில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். 

கேரளம் மாணவர் சங்கம், காங்கிரஸின் மாணவர் பிரிவு மற்றும் முஸ்லீம் லீக் இளைஞர் பிரிவான முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பினர் பல்கலைக்கழகத்தில் புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டத்தின் நகல்களை வியாழக்கிழமை எரித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com