2020.. கரோனா மட்டுமல்ல கள்ள நோட்டுகளும் உச்சம் தொட்ட ஆண்டு

2020ஆம் ஆண்டில், கள்ள நோட்டுகளும் அதிகளவில் புழக்கத்தில் இருந்திருப்பதாக ஒரு அதிர்ச்சிதரும் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.
2020.. கரோனா மட்டுமல்ல கள்ள நோட்டுகளும் உச்சம் தொட்ட ஆண்டு
2020.. கரோனா மட்டுமல்ல கள்ள நோட்டுகளும் உச்சம் தொட்ட ஆண்டு
Published on
Updated on
1 min read


புது தில்லி: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த 2020ஆம் ஆண்டில், கள்ள நோட்டுகளும் அதிகளவில் புழக்கத்தில் இருந்திருப்பதாக ஒரு அதிர்ச்சிதரும் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.

இதுவரை இல்லாத வகையில், ஒரே ஆண்டில் இந்த அளவுக்கு கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதேயில்லை என்று சொல்லுமளவுக்கு இருந்துள்ளது. அதாவது, 2020ஆம் ஆண்டில் மட்டும் ரூ.92.17 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல், தேசிய குற்றப் பதிவு ஆணையம் வெளியிட்ட தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுவே இந்த அளவுக்கு அதிர்ச்சி அளிக்கிறதென்றால், மற்றுமொரு அதிர்ச்சித் தகவல் அடுத்தது காத்திருக்கிறது.  அதுதான். மகாராஷ்டிரத்தைப் பற்றியது. அதாவது, ஒரு ஆண்டு முழுக்க கைப்பற்றப்பட்ட 92 கோடி கள்ள நோட்டில், மகாராஷ்டிரத்தில் இருந்து மட்டும் 83.61 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுதான். இந்த நோட்டுகளின் எண்ணிக்கை 6,99,495 ஆகும்.

அதாவது ஒட்டுமொத்த நாட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டில் 90 சதவீதம் ஒரே மாநிலத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுதான். அதற்கடுத்த இடத்தில் மேற்கு வங்கம் (2.46 கோடி), ஆந்திரம் 1.4 கோடியுடன் மூன்றாவது இடத்திலும், தமிழகம் 1 கோடி கள்ள நோட்டுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.

கள்ள நோட்டுகளை எல்லாம் ஒழிப்பதற்காக என்று, 2016ஆம் ஆண்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழக்கம் செய்த நடவடிக்கைக்குப் பிறகு, 2020ஆம் ஆண்டில் இவ்வாறு 92.17 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உச்சம் தொட்டிருக்கிறது என்றால் அது பல்வேறு விமரிசனங்களையும் உருவாக்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com