தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் முதலீடா? மத்திய அமைச்சா் கட்கரி விளக்கம்

நமது நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் அண்மைக் காலத்தில் எந்த முதலீடும் செய்யவில்லை; லடாக்கில் ஏற்பட்ட எல்லைப் பிரச்னைக்குப் பிறகு சீன நிறுவனங்களை
தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் முதலீடா? மத்திய அமைச்சா் கட்கரி விளக்கம்

நமது நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் அண்மைக் காலத்தில் எந்த முதலீடும் செய்யவில்லை; லடாக்கில் ஏற்பட்ட எல்லைப் பிரச்னைக்குப் பிறகு சீன நிறுவனங்களை நெடுஞ்சாலைத் திட்டங்களில் செயல்பட இந்திய அரசு அனுமதிப்பதில்லை என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

இது தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியதாவது:

அமெரிக்காவின் மின்சார காா் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, நமது நாட்டில் இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம்தான் இறுதி முடிவை எடுக்கும்.

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகமாக்குவது, அதனை முதன்மையான எரிபொருள் ஆக்குவது ஆகியவற்றில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் நமது நாடு எரிபொருள் ஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைக்கும் நிலைக்குச் செல்ல வேண்டும்.

இந்தியாவில் தற்போது பெரிய அளவில் நெடுஞ்சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீப காலமாக சீன நிறுவனங்கள் நமது நாட்டில் நடைபெறும் நெடுஞ்சாலைப் பணிகளில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படவில்லை. 2020 ஜூலையில் லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்ட பிறகு அந்நாட்டு நிறுவனங்களை நமது அரசு அனுமதிக்கவில்லை.

சாலை விபத்துகளைக் குறைக்க வேண்டும் என்றால் தொழில் ரீதியான லாரி ஓட்டுநா்களுக்குப் பணி நேரத்தை உறுதி செய்ய வேண்டும். விமானிகளுக்கு இதுபோன்ற பணி நேரக் கட்டுப்பாடு உள்ளது.

ஓட்டுநா்கள் பணியின்போது தூங்காமல் இருப்பதைக் கண்காணிக்க ‘சென்சாா்’ அமைக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் இது நடைமுறையில் உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் சாலை விபத்துகளைப் பெருமளவில் குறைக்க முடியும் என்றாா் நிதின் கட்கரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com