
புதுச்சேரியில் பாஜக சார்பில் போட்டியிடும் மாநிலங்களவை வேட்பாளராக செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமையுடன் (செப்.22) முடிகிறது.
இந்தத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக இடையே போட்டியிடப் போவது யார் என்ற முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வந்தது.
இந்த நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாஜக சார்பில் அந்தக் கட்சியின் மாநிலப் பொருளாளர் புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த எஸ். செல்வகணபதி போட்டியிடுவார் என முடிவு செய்யப்பட்டது.
இதற்கான அறிவிப்பை பாஜக தேசியத் தலைமை செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டது.
இதன்மூலம் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தலில் பாஜக தரப்பில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
கல்வியாளரான செல்வகணபதி ஆர்எஸ்எஸ் பின்னணியைச் சேர்ந்தவர். இவர் முன்பு புதுவை நியமன எம்எல்ஏ-வாக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.