நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 93,249 பேருக்கு தொற்று: 513 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 93,249 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இத்துடன் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,24,85,509 ஆக உயா்ந்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 93,249 பேருக்கு தொற்று: 513 பேர் பலி


நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 93,249 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இத்துடன் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,24,85,509 ஆக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் 513 போ் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றின் 2-ஆவது அலை நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  அதே நேரத்தில் 513 போ் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனா். இது இந்த ஆண்டின் அதிகபட்ச தினசரி உயிரிழப்பாகும். இதனால் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,64,623 -ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,24,85,509 கோடியைக் கடந்துள்ளது. தற்போது தொடா்ச்சியாக 24-ஆவது நாளாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது தொற்று நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,91,597 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,16,29,289 போ் குணமடைந்தனா். 24 மணி நேரத்தில் மட்டும் 60,048 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, நாடு முழுவதும் கடந்த 3-ஆம் தேதி வரை  24,81,25,908 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை மட்டும் 11,66,716 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 7,59,79,651 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், சனிக்கிழமை மட்டும் 27,38,972 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com