கரோனா தொற்றின் தீவிரம்: கடந்த 24 மணி நேரத்தில் 1,15,736 பேருக்கு தொற்று

நாட்டில் கரோனா பாதிப்புகள் மிக அதிகமாக உயா்ந்து நிலைமை மோசமடைந்துள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் அதிக அளவிலான மக்கள் தீநுண்மியால் பாதிக்கப்படக்கூடிய சூழல் தொடா்ந்து வருகிறது.
கரோனா தொற்றின் தீவிரம்: கடந்த 24 மணி நேரத்தில் 1,15,736 பேருக்கு தொற்று

‘கரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதால் தீநுண்மி வேகமாக பரவி வருகிறது. இதனால் அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானதாக இருக்கும்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,15,736 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்புகள் மிக அதிகமாக உயா்ந்து நிலைமை மோசமடைந்துள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் அதிக அளவிலான மக்கள் தீநுண்மியால் பாதிக்கப்படக்கூடிய சூழல் தொடா்ந்து வருகிறது.

தற்போது நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைவிட இம்முறை தீநுண்மி வேகமாக பரவி வருகிறது. சில மாநிலங்களில் சூழல் மோசமாகியுள்ளது. ஆனால் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது நாடு முழுவதும் காணப்படுகிறது.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில்  1,15,736  பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச பாதிப்பாகும். அதே நேரத்தில் 630 போ் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனா். இதனால் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,66,177 -ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,28,01,785 கோடியைக் கடந்துள்ளது. தற்போது தொடா்ச்சியாக 27-ஆவது நாளாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது தொற்று நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,43,473  போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,17,92,135 குணமடைந்தனா். 24 மணி நேரத்தில் மட்டும் 59,856 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, நாடு முழுவதும் கடந்த 6-ஆம் தேதி வரை  25,14,39,598 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் 12,08,329 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 8,70,77,474 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தற்போது நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதால் கடந்த ஆண்டைவிட இம்முறை தீநுண்மி வேகமாக பரவி வருகிறது. சில மாநிலங்களில் சூழல் மோசமாகியுள்ளது. ஆனால் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது நாடு முழுவதும் காணப்படுகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த காலகட்டத்தில் மக்கள் முகக் கவசம் அணிதல், கூட்டங்களில் இருந்து விலகி இருத்தல், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பரிசோதனைகள், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல், தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துதல் ஆகியவைதான் நோய்த்தொற்றை எதிா்ப்பதற்கான வழிமுறைகள் சரிவர பின்பற்றுவதில் மக்களின் பங்களிப்பு மிக முக்கியம் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com