ரெம்டெசிவிர் உற்பத்தியை அதிகப்படுத்தி, விலை குறைக்கப்படும்: சுகாதாரத் துறை

ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பை ஊக்கப்படுத்தி அதன் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப்  (கோப்புப்படம்)
மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் (கோப்புப்படம்)


ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பை ஊக்கப்படுத்தி அதன் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில் தீவிரமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் ஊசி மருந்துக்கு தேவை அதிகரித்துள்ளதால் அதன் தயாரிப்பை ஊக்கப்படுத்தி அதன் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, கரோனா சிகிச்சையில் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து பயன்படுத்தப்படுகிறது. அதன் விலையை 1,200 முதல் 1,300 ரூபாய் என்ற அளவில் குறைக்கப்படும்.

ரெம்டெசிவிர் மருந்தை தயாரித்து வரும் நிறுவனத்தில் தயாரிப்பு விகிதத்தை இரட்டிப்பாக்க வலியுறுத்தப்படும் என்று கூறினார். 

கரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தற்போது 2,400 முதல் 6,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்காவின் ஜிலீட் சயின்சஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, ரெம்டெசிவிர் ஊசியை, 7 இந்திய நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் மாதம் 38.80 லட்சம் தடுப்பூசிகள் தயாரிக்கும் திறன் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com