தெலங்கானாவில் கரோனா படுக்கைகள் அதிகரிக்க வேண்டும்; தலைமைச் செயலாளர் 

தெலங்கானாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கரோனா படுக்கை வசதிகள் அதிகரிக்குமாறு தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் வியாழக்கிழமை மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
தெலங்கானாவில் கரோனா படுக்கைகள் அதிகரிக்க வேண்டும்; தலைமைச் செயலாளர் 
தெலங்கானாவில் கரோனா படுக்கைகள் அதிகரிக்க வேண்டும்; தலைமைச் செயலாளர் 

கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தெலங்கானாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கரோனா படுக்கை வசதிகள் அதிகரிக்குமாறு தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் வியாழக்கிழமை மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் மூத்த அதிகாரிகளுடன் சந்தித்தபோது, 

மாநிலம் முழுவதும் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் வகையில் எந்தவொரு நிகழ்விற்கும் தயாராக இருக்கும்படியும், படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். 

கரோனா சோதனைகள் விரைவுபடுத்துதல், தடுப்பூசி தீவிரப்படுத்துதல் மற்றும் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது உள்ளிட்ட அரசின் உத்தரவுகளை அமல்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார். 

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பராமரிப்பு மையங்களை இரட்டிப்பாக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த 24 மணி நேரத்தில் தெலங்கானாவில் 3,307 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. இது கடந்ததாண்டைக் காட்டிலும் ஒருநாள் பாதிப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com