உத்தரகண்டில் 67 சுகாதார ஊழியர்களுக்கு கரோனா

உத்தரகண்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், 67 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று பரவியுள்ளதாக மருத்துவ சுகாதாரத்துறை இயக்குநர் எஸ்.கே.குப்தா தெரிவித்துள்ளது. 
உத்தரகண்டில் 67 சுகாதார ஊழியர்களுக்கு கரோனா

உத்தரகண்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர் உள்பட 67 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று பரவியுள்ளதாக மருத்துவ சுகாதாரத்துறை இயக்குநர் எஸ்.கே.குப்தா தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, 

டெஹ்ராடூன், தெஹ்ரி, ஹரித்வார், நைனிடால் மற்றும் உதம் சிங் நகர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 67 சுகாதார ஊழியர்கள் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் உத்தரகண்ட் மாநில செயலகத்தில் மக்கள் நுழைவதைத் தடை செய்துள்ளது. அமைச்சர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டும் செயலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்தார். 

பத்திரிகையாளர்களும் செயலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

உத்தரகண்டில் உள்ள டெஹ்ராடூன், நைனிடால், ஹரித்வார், உதம் சிங் நகர் மற்றும் கோத்வார் பாபர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் ஏப்ரல் 30 வரை மூடப்பட்டுள்ளது. 

டெஹ்ராடூன் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும், மீதமுள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கரோனா தொற்றின் அடிப்படையில் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் தொடரப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்துள்ளார். 

மத்திய சுகாதார அமைச்சகத்தின்படி, உத்தரகண்டில் தற்போது 12,484 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com