மணிப்பூரில் இரவு ஊரடங்கு அறிவிப்பு

கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் மணிப்பூரில் இரவு 7 மணி முதல் அடுத்த நாள் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்க மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. 
Night curfew in Manipur from 7 pm to 5 am
Night curfew in Manipur from 7 pm to 5 am

இம்பால்: கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் மணிப்பூரில் இரவு 7 மணி முதல் அடுத்த நாள் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்க மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. 

முதல்வர் பிஎன்.பிரேன் சிங் தலைமையிலான கரோனா ஆலோசனைக் குழு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரை மாநிலத்தில் இரவு ஊரடங்கு பிறப்பிக்க முடிவு செய்துள்ளதாக தலைமைச் செயலாளர் ராஜேஷ் குமார் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரவு ஊரடங்கு உத்தரவு எத்தனை நாள்கள் அமலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்படவில்லை.

ஊடக நபர்கள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு ஊரடங்கு உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்படும். 

இறுதிச் சடங்குகள், திருமணங்கள் போன்ற தவிர்க்க முடியாத கூட்டங்களைத் தவிர அனைத்து கூட்டங்களையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய கூட்டங்களில் 20 நபர்களுக்கு மட்டும், கரோனா நெறிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com