புவி நாள்: மரம் நடுதலை வலியுறுத்தும் கூகுளின் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம்

புவி நாளை நினைவு கூறும் வகையில் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.

முக்கிய சிறப்பு தினங்களில் அந்த நாளை நினைவு கூறும் அல்லது கௌரவிக்கும் பொருட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் புவி நாளை முன்னிட்டு மரங்களை நடுவதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.

இயற்கையுடன் ஒன்றிய வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக ஒரு விடியோவையும் இத்துடன் வெளியிட்டுள்ளது. கூகுள் பக்கத்தை திறந்து அதில் நேரடியாக விடியோவை காணலாம். 

இதில் ஒரு தலைமுறை தனது அடுத்த தலைமுறைக்கு மரம் நடுவதன் அவசியத்தை கூறுவதாக உள்ளது. எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையின் ஆரோக்கியத்தை உள்ளபடியே வழங்குவது ஒவ்வொருவரின் கடமை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com