ஒலிம்பிக் பதக்கத்தால் லவ்லினா கிராமத்திற்குக் கிடைத்த சாலை

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்த  குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போரோகைனின் கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது
ஒலிம்பிக் பதக்கத்தால் லவ்லினா கிராமத்திற்குக் கிடைத்த சாலை

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்த  குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போரோகைனின் கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது.

ஒலிம்பிக் பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பும்போது லவ்லினா தார் சாலையில் செல்லும் வகையில் அசாம் மாநில எம்.எல்.ஏ. சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளார். 

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டி குத்துச்சண்டையில் 69 கிலோ வெல்டா் பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா பதக்கத்தை உறுதி செய்தார். 

அவரது இந்த கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியை அசாம் மாநிலம் மட்டுமல்லாமல், அவரது சொந்த கிராமும் கொண்டாடி வருகிறது. 

லவ்லினா வெல்லும் பதக்கத்தால் அவரது சொந்த கிராமமான கோல்காட் மாவட்டத்திலுள்ள பாரமுதியா கிராமத்திற்கு தார் சாலை அமையவுள்ளது. 

பாரமுதியா கிராமத்திலிருந்து அவரது இல்லத்தை இணைக்கும் 3.5 கிலோமீட்டர் தூரம் வரையிலான சாலை பராமரிப்பின்றி கிடந்துள்ளது. 

சாலை வசதி கூட இல்லாத தமது கிராமத்திற்கு ஒலிம்பிக் வெற்றியின் மூலம் அவர் பெருமை சேர்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து உள்ளூர் எம்.எல்.ஏ. பிஸ்வாஜித் பொதுப்பணித் துறையின் மூலம் அக்கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளார். 

இது தொடர்பாக எம்.எல்.ஏ. பிஸ்வாஜித் பேசியதாவது, ''பராமரிப்பின்றி சிதைந்து கிடந்த சாலையை தற்போது சீரமைத்து வருகிறோம். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று திரும்பும் லவ்லினாவுக்கு நாங்கள் அளிக்கும் பரிசு இது. அசாம் மக்களும், நாட்டில் உள்ள அனைவரும் லவ்லினாவிற்காக பிரார்த்திக்க வேண்டும். லவ்லினா தங்கம் வென்று திரும்ப வேண்டும். இதன் விளைவாக விளையாட்டிற்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் இக்கிராமத்தில் உருவாக்கப்படும். முதல்வரும் இதற்கு போதிய உதவிகளை செய்வார்'' என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com