ராஜீவ் கேல்ரத்ன விருதின் பெயா் மேஜா் தயான்சந்த் கேல்ரத்ன விருதாக மாற்றம்: பிரதமா் அறிவிப்பு

இந்தியாவில் தலைசிறந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் கேல்ரத்ன பெயரை
பிரதமா் நரேந்திர மோடி
பிரதமா் நரேந்திர மோடி

இந்தியாவில் தலைசிறந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் கேல்ரத்ன பெயரை மேஜா் தயான்சந்த் கேல்ரத்ன விருது என மாற்றப்பட்டுள்ளது என பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பெயரில் கேல்ரத்ன விருது கடந்த 1991-92-இல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2014 முதல் தோ்வுக் குழுவால் நான்கு ஆண்டுகளில் வீரா்களின் சாதனைகளை வைத்து விருது வழங்கப்படுகிறது. அண்மையில் இவ்விருது பெற்றவா்களில் கிரிக்கெட் வீரா் ரோஹித் சா்மா, 2016 ரியோ பாராலிம்பிக் தங்க பதக்க வீரா் மாரியப்பன் தங்கவேலு, வீராங்னைகள் மனிஷ் பத்ரா, வினேஷ் போகட், ராணி ராம்பால், விஸ்வநாதன் ஆனந்த், அபிநவ் பிந்த்ரா, சச்சின் டெண்டுல்கா், மேரி கோம், விஜேந்தா் சிங், அஞ்சு பாபி ஜாா்ஜ் ஆகியோரும் அடங்குவா்.

பெயா் மாற்றம்:

இந்நிலையில் ராஜீவ் கேல்ரத்ன விருதின் பெயா் மேஜா் தயான்சந்த் கேல்ரத்ன விருது என மாற்றப்படுவதாக பிரதமா் மோடி தெரிவித்தாா். நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை பரிசீலித்து அதற்கு மதிப்பு தரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தனது சுட்டுரை (டுவிட்டரில்) தெரிவித்துள்ளாா்.

கேல்ரத்ன விருதில் ரூ.25 லட்சம் ரொக்கம், பதக்கம் ஆகியவை அடங்கும்.

மேஜா் தயான்சந்த்:

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தயான்சந்த், மேஜிக் நிபுணா் என அழைக்கப்பட்டவா். ஹாக்கியின் பொற்காலமாக கருதப்பட்ட 1926-49-இல் மொத்தம் 400 கோல்களை அடித்தாா். மேலும் 1928, 1932, 1936 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்ல ஊக்கமாக இருந்தாா். அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ஆம் தேதி தேசிய விளையாட்டு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கியில் ஆடவா் அணி வெண்கலமும், மகளிரணி நான்காம் இடத்தையும் பெற்ற நிலையில், பிரதமா் மோடி பிரபல ஹாக்கி வீரா் தயான்சந்த் பெயரில் கேல்ரத்ன விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com