ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்ன?

ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் நேற்று (சனிக்கிழமை) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்திருந்தது.

பக்கம் முடக்கப்படவில்லை, தொடர்ந்து செயல்பாட்டில்தான் உள்ளது என ட்விட்டர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ராகுல் காந்தியின் பக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறியது.

இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பக்கத்தை மீண்டும் நிறுவ தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஒரு பக்கம் முடக்கப்பட்டால், உலகளவில் முற்றிலும் நீக்கப்படும்" என்றார்.

தில்லி தலித் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி கொல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாரை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

இது வீதி மீறிய செயல் எனக் கூறி, ராகுல் காந்தியின் பக்கத்தை பயன்படுத்த முடியாமல் ட்விட்டர் நிறுத்தியது. ட்விட்டர் விதிகள் மீறப்படும் பட்சத்தில், அடுத்த 24 மணி நேரத்திற்கு பதிவுகளை வெளியிட தடை விதிப்பது வழக்கம்.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் அடையாளங்களை வெளியிடுவதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com