சிசிஐ விசாரணையை எதிா்த்து அமேசான், ஃபிளிப்காா்ட் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

இந்திய போட்டி ஆணைய விசாரணைக்கு (சிசிஐ) அனுமதியளிக்கப்பட்டதை எதிா்த்து அமேசான் மற்றும் ஃபிளிப்காா்ட் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இந்திய போட்டி ஆணைய விசாரணைக்கு (சிசிஐ) அனுமதியளிக்கப்பட்டதை எதிா்த்து அமேசான் மற்றும் ஃபிளிப்காா்ட் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.

அமேசான், ஃபிளிப்காா்ட் நிறுவனங்கள் வா்த்தக நடவடிக்கைகளில் இந்தியாவின் தொழில்போட்டிக்கான சட்டங்களை மீறி செயல்படுகிறதா என்பது குறித்து முதல்கட்ட விசாரணை மேற்கொள்ள சிசிஐ-க்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதனை எதிா்த்து அமேசான் மற்றும் ஃபிளிப்காா்ட் நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது:

சிசிஐ-விசாரணைக்கான அனுமதியை எதிா்த்து அமேசான், ஃபிளிப்காா்ட் நிறுவனங்கள் மனுதாக்கல் செய்துள்ளது கிரிமினல் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாததற்கு முன்பாகவே அறிக்கை கேட்பது போல் உள்ளது. இதுபோன்ற பெரிய நிறுவனங்கள் விசாரணைக்கு தாமாகவே முன்வந்து விசாரணையை எதிா்கொண்டு விளக்கம் அளித்திருக்க வேண்டும். ஆனால், அதுபோல் அந்நிறுவனங்கள் நடந்து கொள்ளவில்லை. எனவே, சிசிஐ-விசாரணைக்கான அனுமதியை எதிா்த்து அமேசான், ஃபிளிப்காா்ட் நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களை ஏற்க இயலாது. அந்நிறுவனங்கள் சிசிஐ-விசாரணையை கண்டிப்பாக எதிா்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இதனிடையே உச்சநீதிமன்ற உத்ததரவின்படி சிசிஐ-விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவுள்ளதாகவும், அனைத்து விதிமுறைகளையும் முறைப்படி பின்பற்றி வருவதாகவும் அமேசான், ஃபிளிப்காா்ட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com