சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையா? அரசின் பதில் என்ன?

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்கப்படவுள்ளதாக சமூகவலைதளங்களில் வெளியான செய்திக்கு அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்கப்படவுள்ளதாக சமூகவலைதளங்களில் வெளியான செய்திக்கு அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய முக்கிய நகரங்களில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்கப்படவுள்ளதாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது. இதற்கு அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பத்திரிகை தகவல் பணியகத்தின் ட்விட்டர் பக்கத்தில், "இந்த தகவல் பொய்யானது. இம்மாதிரியான முடிவை அரசு எடுக்கவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெட்ரோ நகர மக்கள் பயன்பெறும் வகையில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய முக்கிய நகரங்களில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்கப்படவுள்ளதாக பொய்யான தகவல் வெளியாகிருந்தது. 

சென்னையில் அமையவுள்ள உச்ச நீதிமன்ற கிளையால் ஆந்திரப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வாழும் மக்கள் பயன்பெறவுள்ளதாகவும் பொய்யான தகவல் வெளியாகியிருந்தது. வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டு மக்கள் வாழ்த்து தெரிவித்துவருவதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது அடிப்படை ஆதாரமற்ற தகவல் என அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 1950ஆம் ஆண்டு, ஜனவரி 26ஆம் தேதியிலிருந்து உச்ச நீதிமன்றம் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com