ஆக. 20ல் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி  எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். 
சோனியா காந்தி(கோப்புப்படம்)
சோனியா காந்தி(கோப்புப்படம்)
Updated on
1 min read

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட்டதை அடுத்து, தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களின் ஒற்றுமையை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு இந்த கூட்டத்தை கூட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதன்படி ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாலை 4 மணிக்கு கூட்டம் காணொலி வழியாக நடைபெறும் இந்த கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை தாங்குகிறார்.  மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

பெகாஸஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பாஜக அரசுக்கு எதிரான நாட்டின் பிரச்னைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com