முதன்முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். 
முதன்முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

சென்னை: தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். 

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை நேற்று வெள்ளிக்கிழமை சட்டபேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், தமிழக வரலாற்றில் முதன் முறையாக சட்டப்பேரவையில் இன்று சனிக்கிழமை வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

அவற்றில் இடம்பெற்றுள்ள முக்கியமான சிறப்பு அம்சங்கள்:

* தில்லி விவாசாயிகள் போராட்டத்திற்கு வேளாண் நிதிநிலை அறிக்கை அர்ப்பணிக்கப்பட்டுகிறது. 

* வேட்டையாடி திரிந்த மனிதனை நாகரீகப்படுத்தியது வேளாண் புரட்சி. 

* பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வேளாண்மையில் புரட்சி செய்துள்ளனர். 

* மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு வேளாணி நிதிநிலை அறிக்கை காணிக்கையாக செலுத்தப்பட்டுகிறது. 

* தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் கருத்து கேட்பு நடத்திய பின்னரே வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வேளாண் வணிகர்களையும் கருத்துக்கேட்பு பின்னரே வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

* வேளாண் மக்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் வேளாண் உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் மனித நாகரீகம் பன் மடங்கு வளர்ந்தாலும் உணவின்றி உயிர்வாழ இயலாது. 

*  வேளாண்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தொலைநோக்குத் திட்டம் விளைநிலங்கள் வீட்டுமனை ஆவதால் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. விவசாய சாகுபடி பரப்பை 75 சதவிகிதமாக உயர்ந்த திட்டமிடப்பட்டுள்ளது. 

*  உணவு உற்பத்தியில் தமிழகம் ஓரளவு தன்னிறைவை எட்டியுள்ளது. 

*  உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டில் 125 மெட்ரிக் டன் என்ற இலக்கை எய்திட திட்டமிடப்பட்டுள்ளது.

*  இருபோக சாகுபடி பரப்பை 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேர்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க கிராம அளவில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடங்கப்படும். 

*  கருணாநிதி அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். 

*  ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கை ரூ.10.20 கோடி செலவில் செயல்படுத்தப்படும்

*  தோட்டக்கலைத்துறையின் மூலம் தோட்டக்கலை நடவுப்பொருட்கள் உற்பத்தி மேற்கொள்ளப்படும்.

*  தோட்டக்கலை நடவுப்பொருட்கள் உற்பத்தி ரூ.21.80 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

*  2021-22ம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*  வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படும்

*  அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போல கருணாநிதி வேளாண் வளர்ச்சித் திட்டம் அறிவிப்பு சிறு,குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணை விவசாயிகள் திட்டம் செயல்படுத்தப்படும். 

*  சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசன முறைகள் விரிவுபடுத்தப்படும்.  

*  தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக்கி சாகுபடி பரப்பை உயர்த்த திட்டமிட்டப்பட்டுள்ளது. 

*  தமிழ்நாட்டில் 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

*  வேளாண்மைத்துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படும்.

*  இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்படும். 

*  நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் அறிமுகம் ஊரக இளைஞர் வேளாண் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

*  மானாவரி நிலத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கு மானியம் வழங்கப்படும். 

*   அரசு விதைப்பண்ணைகள் மூலம் ரூ.25 லட்சம் செலவில் பாரம்பரியா நெல் விதைகள் உற்பத்தி செய்யப்படும். 

* அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி, கீரை சாகுபடி பயிர் செய்ய மானியம் வழங்கப்படும்.

*  காய்கறி, காரை சாகுபடியை பெருக்க மானியம் அளிக்கும் திட்டத்திற்கு ரூ.95 கோடி ஒதுக்கீடு செய்து வைட்டமின் சி பெட்டகம் எனப்படும்.  200 ஹெக்டேரில் நெல்லி சாகுபடி செய்யப்படும். 

*   பனை வெல்லத்தை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க பனை மேம்பாடு இயர்ரம் தொடங்கப்படும். 

*   பனை மரத்தை வெட்டும்போது ஆட்சியரின் அனுமதி பெறுவது அவசியம். 

*   பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும்

*   30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் பனங்கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகம்

*  நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

*  சாதாரண ரக நெல்லுக்கு ஊக்கத்தொகை ரூ.50 இல் இருந்து ரூ.75 ஆக உயர்த்தப்பட்டு ஒரு குவிண்டால் ரூ.2015 ஆக கொள்முதல் செய்யப்படும். 

*  சன்னரக நெல் குவிண்டாலுக்கு ஊக்கத்தொகை ரூ.70 இல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டு ஒரு குவிண்டால் சன்ன ரகம் ரூ.2060 ஆக கொள்முதல் செய்யப்படும். 

*  இளைஞர்கள் வேலை தருபவர்களை மாற வேண்டும். முதற்கட்டமாக இளைஞர்களுக்கு 2,500 இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்கும் திட்டம் ரூ.2.68கோடியில் ஒன்றிய-மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.

*  ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும்.

*  பழப்பயிர் சாகுப்படிக்காக ரூ.29.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  பழப்பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க 80 லட்சம் பல்வகைச் செடிகள் தோட்டக்கலை பண்ணைகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

*  பழப்பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க 80 லட்சம் பல்வகைச் செடிகள் தோட்டக்கலை பண்ணைகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

*  கரும்பு விவசாயிகளுக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  இலகு ரக சரக்கு வாகனங்கள் வாங்கும் திட்டத்திற்காக ரூ.21.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  பயறுவகைகள் கொள்முதல் செய்து மதிய உணவுத்திட்டத்தில் வழங்கப்படும். இவை புரதச்சத்து மிக்க பயறு வகைகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும். 

*  மதிய உணவுத் திட்டத்திலும் ரேஷன் கடைகளிலும் பயிறு வகைகள் வழங்கப்படும். துவரை, உளுந்து , பச்சைப்பயிறு 61 ஆயிரம் டன் அளவிற்கு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

*  உற்பத்தித்திறனை அதிகரிக்க ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாக சிறப்புத் தொகுப்பு திட்டம்.

*   வேளாண்மையின் மகத்துவத்தை தெரிந்துகொள்ளும் வகையில் மாநில அளவில் மரபுசார்பு வேளாண்மைக்கான அருங்காட்சியம் அமைக்கப்படும்.

*  சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும். 

*  தஞ்சையில் தென்னை மதிப்புக் கூட்டு மையம் அமைக்கப்படும். 

*  மழையில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக ரூ.52.02 கோடியில் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கப்படும். 

*  சூரிய சக்தியால் இயங்கும் 5000 பம்புசெட்டுகளுக்கு மானியம் வழங்கப்படும். 

*  சூரிய சக்தி பம்புசெட்டுகளுக்கான மானியத்திட்டம் ரூ.114.68 கோடியில் செயல்படுத்தப்படும்.

*   2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும். ஒரு டன் கரும்பு கொள்முதல் விலை ரூ.2,750 இல் இருந்து ரூ.2,900 ஆக அதிகரிக்கப்படும். இதன் மூலம் ஒரு லட்சம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவார்கள். 

*  அரசு விதைப்பண்ணைகள் மூலம் ரூ.25 லட்சம் செலவில் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி செய்யப்படும். 

*   கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்பு திட்டத்திற்கு ரூ.2கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை அறிவித்த அமைச்சர் உறுப்பினர்களை நல்லா கை தட்டி பாராட்டலாமே என்று கூறினார். 

*   காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரம் அல்லது இருபொருள்கள் தோட்டப்பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

*   தோட்டக்கலை பயிர்கள் அதிகம் விளையும் மாவட்டங்களில் தோட்டக்கலை கிடங்குகள் அமைப்பு தென்காசி, நெல்லையில் எலுமிச்சை கிடங்குகள் அமைக்கப்படும். 

* காய்கறித் தோட்டம் திட்டம் தொடங்கப்படும். 

* கிராமங்களில் 12 வகை காய்கறிகள் கொண்ட தளைகளை மானியத்தில் வழங்கப்படும். நகர்புறங்களில் 6 வகை காய்கறிகள் கொண்ட மாடித்தோட்ட தளைகள் மானியத்தில் வழங்கப்படும்.

*  அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி பயிரிடவும் 1000 ஹெக்டேர் பரப்பளவில் கீரை சாகுபடி மேற்கொள்ள மானியம் வழங்கப்படும்.

*  மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகள் கொண்ட தளைகள் 2 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.

*  மூலிகை செடிகளை பெருக்கும் திட்டத்திற்கு ரூ.2.18 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

*  30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் பனங்கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகம் செய்யப்படும்.

*  10 மாவட்டங்களில் 10 உழவர் சந்தைகள் ரூ.6 கோடியில் அமைக்கப்படும். 

*  கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலூர், கரூர், கள்ளக்குறிச்சியிலும் பேரூராட்சி, நகர்ப்புறங்களிலும் சிறிய அளவிலான புதிய உழவர் சந்தை அமைக்கப்படும். 

*  50 உழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து புனரமைக்க ரூ.12.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  5 மாவட்டங்களில் நடமாடும் காய்கனி அங்காடிகள் அமைக்கப்படும்.

*  சென்னை, திருச்சி, கோவை, செலும், திருப்பூரில் பரீட்சார்ந்த முறையில் நடமாடும் காய்கனி அங்காடிகள் அமைக்கப்படும். 
 
*  விளைபொருள்கள் அழுகாமல் பாதுகாக்க பண்ருட்டி, ஒட்டன்சத்திரத்தில் ரூ.10 கோடியில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும். 

*  5 மாவட்டகளில் தொழில் கற்கும் மையங்கள் அமைக்கப்படும். 

*  நீலகிரி மாவட்டம் எடப்பள்ளியில் ரூ.2 கோடியில் ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை மையம் அமைக்கப்படும். 

*  நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ரூ.50 லட்சத்தில் மிளகு பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும். 

*  கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலாவிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிகை எடுக்கப்படும். பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். 

*  காய்கனி அங்காடிகள் அமைக்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். 
சென்னை கொளத்தூரில் விளைபொருள்கள் மதிப்புகூட்டப்பட்ட பொருள்களுக்கு நவீன வேளாண் விற்பனை மையம் அமைக்கப்படும். 

*  நாகையில் மீன் பதப்படுத்துதல் தொழில்கற்கும் மையம் அமைக்கப்படும். 

*  நாடு முழுவதும் உள்ள வியாபாரிகளை விவசாயிகளுடன் இணைப்பு ஏற்படுத்த மின்னணு ஏல முறை அமல்படுத்தப்படும். இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  ரூ.3.5 கோடியில் உலர் களங்கள் அமைக்கப்படும். 

*  புதுக்கோட்டை , மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரியில் உலர் களங்கள் அமைக்கப்படும்.

*  முருங்கைக்காய் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை அதிகரிக்க முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் ஏற்படுத்தப்படும். 

*  தமிழ்நாட்டில் பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,327 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  துவரை, உளுந்து, பச்சைப்பயறு போன்றவற்றை 61 ஆயிரம் டன் அளவுக்கு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

*  விவசாயத்திற்கான இலவச மின்சார திட்டத்திற்காக மின்வாரியத்திற்கு ரூ.4,508.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


*  கிருஷ்ணகிரி ஜீனூரில் 150 ஏக்கரில் ரூ.10 கோடியில் புதிதாக தோட்டக்கலைக் கல்லூரி அமைக்கப்படும். 

*  கறவை மாடு வளர்ப்போரின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.14.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  கோவையில் உள்ள அலுவலகம் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் என பெயர் மாற்றம் செய்யப்படும்.

*  வேளாண்மை. சார்புத்துறைகளுக்கு ரூ.34,220 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  மீன் விற்பனை அங்காடிகளின் கட்டமைப்புக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  தமிழ்வழியில் வேளாண் தோட்டக்கலை கல்வி அறிமுகம் செய்யப்படும்.

*  வேளாண்மை, தோட்டக்கலை இளநிலை பாடத்தை கோவை கல்லூரியில் தமிழில் பயிற்றுவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

*  மழை நீரை சேமித்து பயிர் உற்பத்தியை பெருக்க வயல்களில் 500 பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாரத்தில் ரூ.5 கோடியில் பலாப்பழ சிறப்பு மையம் அமைக்கப்படும். 

*  கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1 கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும். 

*  அரசு மீன் பண்ணைகள், மீன் விற்பனை அங்காடிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.7.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  பசும்தீவன வங்கிகளை ஏற்படுத்த நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணைக்கு ரூ.27.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  ஈரோடு மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் 100 ஏக்கரில் அமைக்கப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com