ஆக. 14 பிரிவினை அதிர்ச்சி நினைவுநாள்: மத்திய அரசு அறிவிப்பு

ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரிவினை அதிர்ச்சி நினைவுநாளாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆக. 14 பிரிவினை அதிர்ச்சி நினைவுநாள்: மத்திய அரசு அறிவிப்பு
ஆக. 14 பிரிவினை அதிர்ச்சி நினைவுநாள்: மத்திய அரசு அறிவிப்பு


புது தில்லி: ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரிவினை அதிர்ச்சி நினைவுநாளாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய உள்விவகாரத் துறை இணைச் செயலாளர் ராகேஷ் குமார் சிங் வெளியிட்டிருக்கும் அறிவிக்கையில், சுதந்திர நாளை நாட்டு மக்கள் கொண்டாடும் அதே வேளையில், தாய்நாட்டுக்காக தங்களது இன்னுயிரை ஈன்ற மக்களுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டும். எனவே, நாட்டு பிரிவினையின்போது தங்கள் இன்னுயிரை ஈன்ற மக்களை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 14ஆம் தேதியை பிரிவினை அதிர்ச்சி நினைவுநாளாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, பிரிவினையின்போது நாட்டு மக்கள் சந்தித்த துயரங்களை தற்கால மற்றும் எதிர்கால சந்ததியினர் நினைவுகூரும் வகையைல் ஆகஸ்ட் 14ஆம் தேதியை பிரிவினை அதிர்ச்சி நினைவுநாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தபோது  பிரிவினையால் ஏற்பட்ட வலிகளை ஒரு போதும் முறக்க முடியாது. லட்சக்ணக்கான மக்கள் இடம்பொயர்ந்ததுடன் வெறுப்பு வன்முறைக்கு ஏராளமானோர் உயிரிழந்தனர்.

நமது மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாக பிரிவினை அதிர்ச்சி நினைவுநாள் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com