
அனுராக் தாக்குர் (கோப்புப் படம்)
கலாசார ரீதியாக மட்டுமல்லாமல் நீர்பாசனம் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கும் கங்கை நதி அவசியம் என்று மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டதையே நானும் கூறுகிறேன்.
கங்கை நதி கலாசாரம் மற்றும் ஆன்மிக ரீதியில் மட்டுமில்லாமல் நீர்பாசனத்திற்கும் அவசியமானது. நாட்டில் சுமார் 40 சதவிகித மக்களுக்கு கங்கை நதி மூலம் நீர்பாசனம் மற்றும் குடிநீர் வசதி பெறுகின்றனர்'' என்று கூறினார்.
படிக்க | சாதிவாரி கணக்கெடுப்பு அனுமதி: 'பிரதமரை சந்திக்க காத்திருக்கிறேன்'