
நிதீஷ் குமார் (கோப்புப் படம்)
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க காத்திருப்பதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பிகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு அனுமதி கோரி பிரதமருக்கு அனுப்பப்பட்ட எனது கடிதம் பெறப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச வேண்டும். பிரதமர் நேரம் ஒதுக்குவதற்காக காத்திருக்கிறோம்'' என்று கூறினார்.
படிக்க | சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாத பழங்குடியின மாணவி
நாட்டின் நலனுக்காகவே சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக கடந்த 9-ம் தேதி பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்திருந்தார்.