நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 55 கோடியைக் கடந்தது

நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 55 கோடியை கடந்து விட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 55 கோடியை கடந்து விட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா திங்கள்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘‘நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் அளவு சாதனை படைக்கும் விதமாக 55 கோடியைக் கடந்து விட்டது.

கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை வலுப்படுத்துவோம்; தடுப்பூசி செலுத்துவோம்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கரோனா தடுப்பூசிகளை செலுத்தும் இலக்கில் 10 கோடியை எட்ட இந்தியாவுக்கு 85 நாள்கள் ஆனது. 20 கோடியைக் கடக்க 45 நாள்களும், 30 கோடியைக் கடக்க 29 நாள்களும் ஆனது. அடுத்த 24 நாள்களில் 40 கோடி தடுப்பூசிகளும், ஆகஸ்ட் 6 ஆம் தேதியுடன் 50 கோடி தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு விட்டது.

இந்நிலையில் ஆக. 14-ஆம் தேதி செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 54 கோடியைத் தாண்டி விட்டது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கம் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் சுகாதாரப் பணியாளா்களுக்கும், பிப். 2-ஆம் தேதி முதல் முன்களப் பணியாளா்களுக்கும் தொடங்கப்பட்டது.

அதன் அடுத்த கட்டமாக மாா்ச் 1 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவா்களில் இணை நோய் பாதிப்புள்ளவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டது. மேலும், ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை இந்தியா தொடங்கியது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மே 1 முதல் தடுப்பூசித் திட்டத்தை மத்திய அரசு விரிவுபடுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com