
கோப்புப்படம்
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,298 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 1,833 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 32 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,31,827 ஆக உயர்ந்துள்ளது. இதில் 28,73,281 பேர் குணமடைந்துவிட்டனர், 37,039 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | 6 கோடி தடுப்பூசிகள் செலுத்திய முதல் மாநிலமானது உத்தரப்பிரதேசம்
இன்றைய நிலவரப்படி 21,481 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆகஸ்ட் 16-ம் தேதிக்கான நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 1.01 சதவிகிதம். இறப்பு விகிதம் 2.46 சதவிகிதம்.