'குழந்தைகளை பயமில்லாமல் பள்ளிக்கு அனுப்புங்கள்': கர்நாடக அமைச்சர் கருத்துக்கு பாஜக எம்எல்ஏ எதிர்ப்பு

குழந்தைகளை பயமில்லாமல் பள்ளிக்கு அனுப்புங்கள் என கர்நாடக அமைச்சர் எஸ்.டி. சோமசேகர் செவ்வாய்க்கிழமை பெற்றோர்களை வலியுறுத்தினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


குழந்தைகளை பயமில்லாமல் பள்ளிக்கு அனுப்புங்கள் என கர்நாடக அமைச்சர் எஸ்.டி. சோமசேகர் செவ்வாய்க்கிழமை பெற்றோர்களை வலியுறுத்தினார்.

இதுகுறித்து அமைச்சர் தெரிவித்தது:

"அரசு உங்களுடன் துணை நிற்கிறது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 23 முதல் வகுப்புகள் தொடங்குகின்றன. நான் எப்போதும் உங்களுடன் துணை நிற்பேன். வல்லுநர்களின் பரிந்துரையின் பேரில்தான் பள்ளிகளைத் திறக்க முடிவெடுக்கப்பட்டது. சூழல் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் குறைகிறது, இறப்பு விகிதமும் குறைந்து வருகிறது."

ஆனால், பாஜக எம்எல்ஏ பி. ஹர்ஷவர்தன், பள்ளிகளைத் திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தெரிவித்தது:

"சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்தைக் கேட்காமல் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளைத் தொடங்கலாம் என்ற முக்கியமான முடிவை அரசு எப்படி எடுத்தது என்பது எனக்குத் தெரியவில்லை. ஒரு பெற்றோராக இந்த முடிவை நான் கடுமையாக எதிர்க்கிறேன். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மூலம் வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால் அரசு பொறுப்பேற்றுக்கொள்ளுமா. அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com