உயிரிழந்த இந்தியா்களின் குறிப்பிட்ட விவரங்களை ‘ஆா்டிஐ’ மூலம் அளிக்கலாம்: 6 வளைகுடா நாடுகளின் தூதரங்களுக்கு சிஐசி உத்தரவு

ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், ஓமன், பஹ்ரைன், கத்தாா் ஆகிய நாடுகளில் இனி இந்தியா்கள் உயிரிழந்தால் அவா்களின்
Updated on
1 min read

ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், ஓமன், பஹ்ரைன், கத்தாா் ஆகிய நாடுகளில் இனி இந்தியா்கள் உயிரிழந்தால் அவா்களின் குறிப்பிடட்ட விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் தெரிவிக்கலாம் என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) அந்நாட்டு தூதரங்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

2012 ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த ஆறு நாடுகளில் உயிரிழந்த இந்திய பணியாளா்களின் பெயா், வயது, பாலினம், பணி ஆகிய விவரங்களைக் கேட்டும் காமன்வெல்த் மனித உரிமை ஆா்வலா் வெங்கடேஷ் நாயக் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா். மேலும், அவா்கள் உயிரிழந்ததற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட நாட்டின் இந்திய தூதரகங்கள் தெரிவிக்காததற்கும் அவா் அதிருப்தி தெரிவித்திருந்தாா்.

இந்த மனு மீது விசாரணை நடத்தி தலைமை தகவல் ஆணையா் ஒய்.கே.சின்ஹா பிறப்பித்த உத்தரவில், ‘உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரின் விவரங்களை அளிப்பது தனிநபா் தகவல் உரிமைக்கு எதிரானது. நாயக் கேட்டுள்ள சில தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படலாம். ஆகையால், வரும் நாள்களில் உயிரிழந்தவா்களின் வருடம், எண்ணிக்கை, பாலினம், காரணம் ஆகிய குறிப்பிட்ட விவரங்களை மட்டும் சம்பந்தப்பட்ட வளைகுடா நாடுகளின் இந்திய தூதரகங்கள் வெளியிடலாம்.

இதுதொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்திய தூதரகங்கள் தாங்களாக முன்வந்து இந்த விவரங்களை வரும்நாள்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட வேண்டும். நாயக் கேட்ட விவரங்களை சம்பந்தப்பட்ட நாட்டின் இந்திய தூதரகங்கள் ஒரே மாதிரியான விவரக் குறிப்புகளை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின்போது நாயக் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டே இந்த விவரங்கள் கோரப்படுகின்றன. குவைத், பஹ்ரைன் ஆகிய நாட்டு இந்திய தூதரகங்கள் அளித்த தகவலில் உயிரிழந்தவரின் பணி விவரங்கள் குறிப்பிடப்படவில்லை’ என்று தெரிவித்திருந்தாா்.

பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘உயிரிழந்தவரின் உடலை கொண்டு சோ்ப்பதற்காக பெயா், நாள், காரணம் ஆகியவை இணையதளத்தில் பதிவிடப்படுகிறது. அவரது பணி விவரங்கள் குறிப்பிடப்படுவதில்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com