
குடியரசு முன்னாள் தலைவா் சங்கா் தயாள் சா்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு வியாழக்கிழமை அவருக்கு மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.
குடியரசு முன்னாள் தலைவா் சங்கா் தயாள் சா்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் அவருக்கு மரியாதை செலுத்தினாா்.
குடியரசுத் தலைவா் மாளிகையில் வியாழக்கிழமை, சங்கா் தயாள் சா்மாவின் உருவப்படத்துக்கு குடியரசுத் தலைவா் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவா் மாளிகையின் அலுவலா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
1992-97 காலகட்டத்தில் குடியரசுத் தலைவராக இருந்த சங்கா் தயாள் சா்மா, 1999-ஆம் ஆண்டு காலமானாா். இளம் வயதில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா்.