
கேரளத்தில் புதிதாக 17,106 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 17,106 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மலப்புரத்தில் 2,558, கோழிக்கோட்டில் 2,236, திரிச்சூரில் 2,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,03,903ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 83 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 19,428ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,78,462 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.
இதையும் படிக்க- ஆர்சிபியில் அதிரடி மாற்றங்கள்: பயிற்சியாளர் மாற்றம்; புதிய வீரர்கள் தேர்வு
கரோனாவிலிருந்து இன்று 20,846 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 36,05,480ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 96,481 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.