சிறார்களுக்கு தடுப்பூசி அனுமதி: கேடிலா நிறுவனத்தின் பங்குகள் 4% உயர்வு

கேடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி கரோனா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வர்த்தகத்தில் அந்நிறுவனத்தின் பங்குகள் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
சிறார் தடுப்பூசிக்கு அனுமதி: கேடிலா நிறுவனத்தின் பங்குகள் 4% உயர்வு
சிறார் தடுப்பூசிக்கு அனுமதி: கேடிலா நிறுவனத்தின் பங்குகள் 4% உயர்வு


கேடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி கரோனா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வர்த்தகத்தில் அந்நிறுவனத்தின் பங்குகள் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் விதமாக மத்திய அரசு அனுமதி அளித்த இரண்டு நாள்களில் அந்நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகத்தின் முதல் நாளான இன்று (ஆக. 23)  4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி கரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (டிசிஜிஐ) கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

இந்தியாவில் கடந்த ஜனவா் 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்ஸின்’ மற்றும் சீரம் நிறுவனத்தின் சாா்பில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்ட்’ ஆகிய 2 தடுப்பூசிகளும் அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து, 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் விதமாக சைகோவ்-டி கரோனா தடுப்பூசிக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள 6-வது தடுப்பூசி இது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com