தலிபான்களை எதிர்க்க குவாட் கூட்டமைப்பு: பிபின் ராவத் யோசனை

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயங்கரவாத குழுக்களுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும் என முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயங்கரவாத குழுக்களுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும் என முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயங்கரவாத குழுக்களுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும் என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான உலகப் போரில் குவாட் கூட்டமைப்பு நாடுகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றுவார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்றே,. ஆனால், அது இவ்வளவு விரைவாக நடைபெற்றது ஆச்சரியம் அளிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், தலிபான்கள் மாறவில்லை" என்றார்.

அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் நடத்திய கருத்தரங்கில் பிபின் ராவத், அமெரிக்க இந்தோ - பசிபிக் பிரிவு அட்மிரல் ஜான் அகிலினோ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்தியா எதிர்கொள்ளும் சவால்களை மேற்கோள்காட்டிய அகிலினோ, இந்திய சீன எல்லையின் இறையாண்மை குறித்தும் தென் சீன கடல் பகுதியில் நிலவும் அடிப்படை பாதுகாப்பு பிரச்னைகள் குறித்தும் பேசினார்.

இதை தொடர்ந்து பேசிய பிபின் ராவத், "பிராந்தியத்தில் பயங்கரவாதம் இல்லாத சூழலை ஏற்படுத்த இந்திய உறுதி பூண்டுள்ளது. ஆப்கானிஸ்தானை பொறுத்தவரையில், இந்தியாவில் எப்படி பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி அளிக்கப்படுகிறதோ அதேபோல் அந்நாட்டிலிருந்து இங்கு வரும் குழுக்களுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும்.

பயங்கரவாதிகளை கண்டறிவது பயங்கரவாதத்திற்கு எதிரான உலகப் போரில் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்தவது போன்ற உதவிகளை குவாட் நாடுகள் செய்தால், அது வரவேற்கப்படும்" என்றார்.

குவாட் கூட்டமைப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com