உத்தரப் பிரதேசம் : விவசாயிகள் போராட்டத்தால் 40 ரயில்கள் ரத்து

உத்தரப் பிரதேசத்தின்  மொராதாபாத் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில்  அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட  விவாசாயிகளின் பாதுகாப்பிற்காக நேற்று (ஆக-24) இயக்கப்பட இருந்த 40 ரயில்களை ரயில்வே துறை ரத்து செய்தி
உத்தரப் பிரதேசம் : விவசாயிகள் போராட்டத்தால் 40 ரயில்கள் ரத்து
உத்தரப் பிரதேசம் : விவசாயிகள் போராட்டத்தால் 40 ரயில்கள் ரத்து

உத்தரப் பிரதேசத்தின்   மொராதாபாத் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட  விவாசாயிகளின் பாதுகாப்பிற்காக நேற்று (ஆக-24) இயக்கப்பட இருந்த 40 ரயில்களை ரயில்வே துறை ரத்து செய்திருக்கிறார்கள்.

மாநிலத்தில் மூன்று புதிய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம்  (பதவி உயர்வு மற்றும் வசதி) சட்டம், 2020 ,  விவசாயிகளுக்கு  அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பான விலை உறுதி , ஒப்பந்தம் தொடர்பான சட்டம்  2020 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) சட்டம், 2020 ஆகிய திட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்தவர்கள்  மொராதாபாத் பகுதியில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து போரட்டத்தை தொடர்ந்தனர்.

இதை எதிர்பார்க்காத ரயில்வே நிர்வாகம் போராட்டக்காரர்களின் உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால் அந்த பாதையில் செல்லும் 40 ரயில்களை  ரத்து செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து ரயில்வே துறையின்  கோட்ட வணிக மேலாளர் ' போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தண்டவாளங்களில் அமர்ந்ததால் உடனடியாக கிளம்பத் தயாராக இருந்த 21 ரயில்கள் நிறுத்தப்பட்டதுடன் 40 ரயில்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டது . பயணச்சீட்டை முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணத் தொகை திருப்பி அனுப்பப்படும் ' எனத் தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com