மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றாகச் சென்ற விஜய் - த்ரிஷா!

திருமண நிகழ்ச்சியில் விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாகச் சென்று பங்கேற்றது குறித்து...

News image

திருமண நிகழ்ச்சியில் விஜய் - த்ரிஷா - படம் - எக்ஸ்

Updated On :5 மார்ச் 2026, 5:08 pm

ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும், த்ரிஷாவும் ஒரே காரில் சென்று பங்கேற்றனர்.

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது விஜய்யும் த்ரிஷாவும் ஒரே காரில் நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஜன நாயகன் திரைப்படத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் விஜய் களமிறங்கியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முக்கிய மாவட்டங்களில் மாநாடுகளை நடத்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை, நடிகையுடன் ஒப்பிட்டு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருந்தது சர்ச்சையாகியிருந்தது. பின்னர் இதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யும், த்ரிஷாவும் சென்னையில் இன்று (மார்ச் 5) நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒரே காரில் சென்று பங்கேற்றுள்ளனர்.

ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் ஒரே நிற உடையில் பங்கேற்றனர். இது தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய்யும் த்ரிஷாவும் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்தன.

Summary

Vijay and Trisha went to a wedding together viral video

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.