விரோஷ் திருமணத்தில் பங்கேற்ற சென்னை புகைப்படக் குழு! இதுவரை வெளியாகாத தகவல்!!
விரோஷ் திருமணத்தில் சப்தமில்லாமல் பங்கேற்றுத் திரும்பிய சென்னை புகைப்படக் குழு பற்றி இதுவரை வெளியாகாத தகவல்கள்


கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்ற விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனாவின் 'விரோஷ்' திருமணத்தைப் பற்றிய விவரங்களை சமூக ஊடகங்கள் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருக்கின்றன.
ஒரு பக்கம் விஜய் தேவரகொண்டாவின் ஆடை, அலங்காரம் பற்றி அவரது ரசிகைகளும், ராஷ்மிகாவின் நகை உள்ளிட்ட அலங்காரங்கள் பற்றி ரசிகர், ரசிகைகளும் பேசி பேசி மாளவில்லை.
அனைத்து முக்கிய பிரபலங்களின் திருமணத்தையும் போலவே - மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பார்வையில் இருந்து சற்று விலகியே இருந்த இவர்களது காதல் மற்றும் திருமணம் பற்றிய பல பரபரப்பான தகவல்கள் இன்னமும் வெளிச்சத்துக்கு வரவில்லை. ஆனால், பொழுதுபோக்கு ஊடகங்கள் சும்மா இருந்துவிடுமா? ஆடை அலங்காரத்தை வடிவமைத்தது யார், எவ்வளவு செலவாகியிருக்கும் என தகவல்களை திரட்டத் தொடங்கிவிட்டன.
பிரமாண்டமாக நடைபெற்ற திருமணத்துக்கான செலவு, ரஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா அணிந்திருந்த நகைகளின் விலை, அவர்களின் திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய கொண்டாட்டங்களின் விவரங்கள் என பலவற்றையும் திரட்டி வருகின்றன.
பிப்ரவரி 26 அன்று ராஜஸ்தானின் உதய்பூரில் நடந்த ஆடம்பரத் திருமணம் பற்றிய இந்த தகவல் திரட்டுகளுக்கு அப்பால், சென்னையில் ஒரு குழு அமைதியாக வேலை செய்து கொண்டிருந்தது.
விழாவுக்கு வந்த விருந்தினர்கள் பழங்கால அனுபவங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, மிகச் சிறந்த திருமண விழாவில் பங்கேற்றதற்கான அனுபவத்துடன், மிக அழகிய புகைப்படங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றனர். அதற்கான குழுவில் சென்னையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்களும் இருந்தனர்.

ஆன் தோரா -அவினாஷ்
மெட்ராஸ் பெட்டி போட்டோகிராஃபி என்ற நிறுவனத்தின் பெயரில் புகைப்படத் துறையில் தடம் பதித்து வெற்றிக் கொடிகளை நாட்டி வரும் இளம் தம்பதியான ஆன் தோரா - அவினாஷ் தொழில்முனைவோர்களை, விரோஷ் திருமண வைபவத்தை ஒருங்கிணைத்து திட்டமிட்டு நடத்திய ஆர்விஆர் ஈவன்ட்ஸ் டிசைன் குழுவினர் தொடர்புகொண்டு, மணமகன் - மணப்பெண் பெயரைச் சொன்ன போது இருவரும் நிச்சயம் மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்றிருப்பார்கள் என்பதை அவர்களது வார்த்தைகளே விளக்குகின்றன.
2019 ஆம் ஆண்டில், கல்லூரியில் ஒன்றாக படித்து பட்டம் பெற்ற அவினாஷ் மற்றும் ஆன் இணையர், சென்னையில் முதலில் திருமண புகைப்படத் தொழிலைத் தொடங்கினர். இதில் புதுமையைப் புகுத்த நினைத்த இவர்கள், மணமக்கள் மற்றும் திருமணத்துக்கு வரும் விருந்தினர்களின் நினைவுகளை மிக உறுதியான ஒன்றாகப் பாதுகாக்கும் வாய்ப்பை வழங்குவதன் மூலம் தங்கள் தொழிலை மேலும் ஈடுபாட்டுடனும் அர்த்தமுடனும் மாற்ற முடிவு செய்தனர்.
அப்போதுதான் படைப்பாற்றலுடன் விருந்தினர்கள் தங்களை எந்த பின்னணியில் பார்க்க விரும்புகிறார்களோ அந்த வாய்ப்பை வழங்கும் வகையிலான புகைப்படக் கூடத்தை உருவாக்கினர். அப்போது நெருங்கிய வட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்குச் சென்று அவர்கள் விரும்பும் வகையிலான புகைப்படக் கூடத்தை அமைத்துக் கொடுத்து விருந்தினர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருந்தனர்.

மெல்ல இந்த தொழிலில் புதுமைகளைப் புகுத்தியபோதுதான் விரோஷ் திருமண வைபத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் விரும்பும் வகையில் பல பழைய கால நினைவுகளைப் புதுப்பிக்கும் வகையிலான புகைப்படக் கூடத்தை அமைத்திருந்தோம்.
விஜய் - ராஷ்மிகா தம்பதியினரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரிடமிருந்து எங்கள் புகைப்படக் கூடம் பற்றிய விவரங்கள் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாகக் கேள்விப்பட்டோம், மேலும் அவர்களுக்கு எங்களது விண்டேஜ் புகைப்படக் கூடம் மிகவும் பிடித்திருந்ததாகக் கூறியதுடன், அவர்களது திருமண திட்டங்களுக்கும் எங்கள் விண்டேஜ் புகைப்படக் கூடம் என்ற அழகான கருப்பொருளுடன் ஒத்துப்போகும் என்று உணர்ந்து மகிழ்ச்சி அடைந்ததையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதாக ஆன் கூறுகிறார்.
பிறகுதான், அந்த ஆச்சரிய தகவலையும் ஆன் பகிர்ந்து கொண்டார், அதாவது "விஜய் மற்றும் ராஷ்மிகா அவர்களின் திருமண சடங்குகளில் அதிக மும்முரமாக இருப்பார்கள், எங்கள் புகைப்படக் கூடத்துக்கெல்லாம் வந்து புகைப்படம் எடுக்க முடியாது என்றுதான் நாங்கள் முதலில் நினைத்திருந்தோம். ஆனால் அவர்கள் அதற்கான நேரம் ஒதுக்கி அவர்களின் அனைத்து திருமண நிகழ்வுகளிலும் எங்கள் புகைப்படக் கூடத்தில் புகைப்படங்களை எடுத்தனர். அவர்கள் எங்கள் புகைப்படக் கூடத்தின் வேலைப்பாடுகளை மனதாரப் பாராட்டினர், 'க்யூட்' என்ற வார்த்தையை அவர்கள் உச்சரித்தபோது நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம் என்று ஆன் கூறும்போது அவரது கண்கள் பிரகாசித்தன.
விருந்தினர்களும் எங்கள் புகைப்படக் கூடத்தில் அவர்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தவர்கள், பலரும் எங்கள் புகைப்படக் கூடத்தை ரசித்தனர் என்று நிறைவு செய்கிறார்கள் அவர்களது அனுபவப் பகிர்வை.
- ரக்ஷிதா பிரியா ஜி, நிதர்ஷனா ராஜூ
இதையும் படிக்க..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...