தமிழ்நாடு ஆளுநர் (பொறுப்பு) ஆர்.வி. ஆர்லேகர்! 9 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் மாற்றம்!
தமிழ்நாடு ஆளுநராக (பொறுப்பு) ஆர்.வி. ஆர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...


தமிழ்நாடு ஆளுநராக (பொறுப்பு) ஆர்.வி. ஆர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள ஆளுநராக உள்ள இவருக்கு, தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்க மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 9 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹிமாசலப் பிரதேச ஆளுநராக இருந்த ஷிவ் பிரதாப் சுக்லா தெலங்கானா ஆளுநராக நியமனம்.
தில்லி துணை நிலை ஆளுநராக தரன்ஜித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
தெலங்கானா ஆளுநராக இருந்த ஜிஷ்னு தேவ் வர்மா மகாராஷ்டிர ஆளுநராக நியமனம்.
நாகாலாந்து ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிகார் ஆளுநராக (ஓய்வு) லெப்டினென்ட் ஜெனரல் சையத் அதா நியமிக்கப்பட்டுள்ளார்.
லடாக் துணை நிலை ஆளுநராக இருந்த கவிந்தர் குப்தா ஹிமாசலப் பிரதேசத்தின் ஆளுநராக நியமனம்.
லடாக் துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்ட நியமனங்கள் அந்தந்த, மாநில அலுவலகங்களில் பொறுப்பேற்கும் தேதிகளிலிருந்து அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...