கோவிஷீல்டு தடுப்பூசியின் இடைவெளிக் காலம் குறைக்கப்படுகிறதா?

கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு தவணைகளுக்கான இடைவெளி காலம் குறையலாம் என்று அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
கோவிஷீல்டு தடுப்பூசியின் இடைவெளிக் காலம் குறைக்கப்படுகிறதா?

கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளுக்கான இடைவெளி காலம் குறையலாம் என்று அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராஜெனெகா இணைந்து தயாரித்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற நிறுவனம் தயாரிக்கிறது. 

இந்தியத் தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணைக்கு இடையிலான இடைவெளிக் காலம் தற்போது 84 நாள்களாக உள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபோது இதன் இடைவெளி காலம் 4 முதல் 6 வாரங்களாக இருந்த நிலையில் பின்னர், 6 முதல் 8 வாரங்களாக அதிகரிக்கப்பட்டது. 

தொடர்ந்து இந்த தடுப்பூசி, அதிக நோயெதிர்ப்பு சக்தியை அளிப்பதாகக்கூறி இடைவெளி காலம் 12 முதல் 16 வாரங்களாக மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், தடுப்பூசி பற்றாக்குறைதான் இதற்கு காரணம் என்று மக்களிடையே பேசப்பட்டது. 

இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் இடைவெளிக் காலம் மூன்றாவது முறையாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. இதன்படி கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளிக் காலம் குறைக்கப்படலாம் என்று அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இதுகுறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com