ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்களை மீட்க முன்னுரிமை: மத்திய அரசு

ஆப்கானிஸ்தானில் சிக்கி தவித்துவரும் இந்தியர்களை மீட்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
Published on
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் சிக்கி தவித்துவரும் இந்தியர்களை மீட்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசிக்கும் வகையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் விவரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பிரதமர் மோடி நேற்று அறிவுறுத்திய நிலையில், அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. அமெரிக்க, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டுவரும் மீட்பு பணிகள் குறித்து ஜெய்சங்கர் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்காக 15,000 பேர், அரசிடம் உதவி கேட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களால் முடிந்த வரையில் மக்களை மீட்க இந்தியா முயற்சி செய்துவருவதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெய்சங்கர் ட்விட்டர் பக்கத்தில், "மிகக் கடினமான சூழலில் மீட்பு பணிகளை மேற்கொண்டுவருகிறோம். குறிப்பாக விமான நிலையத்தில் மீ்ட்பு பணிகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளது. நமது உடனடி பணி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது. அடுத்தது. ஆப்கான் மக்களின் நட்புணர்வை பேணி காப்பது" என பதவிட்டுள்ளார்.

அனைத்து கட்சி கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "இது ஒட்டுமொத்த நாட்டின் பிரச்னை. நாட்டு மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து கட்சிகளுக்கும் இதில் ஒரே பார்வையே உள்ளது" என்றார். 

பயங்கராவதிகளின் மையமாக ஆப்கானிஸ்தான் மாறிவிடக்கூடாது. ஆப்கன் விவகாரத்தில் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து வைப்பதாக மத்திய அரசு கூறியுள்ளதாக ஆலோசனையில் கலந்து கொண்ட திமுகவின் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com