யூனிடெக் குழுமத்தின் முன்னாள் இயக்குநர்களை மும்பை சிறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

யூனிடெக் குழுமத்தின் முன்னாள் இயக்குநர்களான சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா ஆகியோரை தில்லி திகார் சிறையிலிருந்து மும்பை சிறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

யூனிடெக் குழுமத்தின் முன்னாள் இயக்குநர்களான சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா ஆகியோரை தில்லி திகார் சிறையிலிருந்து மும்பை சிறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

யூனிடெக் குழுமத்தின் முன்னாள் இயக்குநர்களான சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா ஆகியோரை தில்லி திகார் சிறையிலிருந்து மும்பை தலோஜா சிறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கட்டத்தின் அடிதளத்தில் ஒரு ரகசிய அலுவலகத்தை யூனிடெக் குழுமத்தின் நிறுவனர் ரமேஷ் சந்திரா பயன்படுத்திவருவதாகவும் சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா ஆகியோர் பரோலில் உள்ளபோது அங்கு சென்றதாகவும் அமலாக்கத்துறை இயக்குநரகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பத்தனர்.

சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா ஆகியோர் சிறையில் இருந்தபடியே தங்களின் அலுவலர்களிடம் எளிதாக தொடர்புகொண்டுவருதாகவும் சொத்துகளை விற்றுவருவதாகவும் இதற்கு திகார் சிறை நிர்வாகம் உதவியாதகவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறையின் வாதகங்களை கேட்டறிந்த டி. ஒய். சந்திரசூட், எம்.ஆர். ஷா ஆகியோர் கொண்ட அமர்வு, தில்லி காவல்துறை ஆணையர் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தது.

வீடு வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்துவிட்டதாக யூனிடெக் குழுமத்திற்கு எதிராக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தில்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். வீடு வாங்கி தருவதாக பெற்றுகொண்ட 325 கோடி ரூபாயை கார்னஸ்டி குழுத்தின் வங்கி கணக்கில் மாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com