யூனிடெக் குழுமத்திற்கு எதிரான வழக்கில் லண்டன் விடுதி பறிமுதல்

யூனிடெக் குழுமத்திற்கு எதிரான பண மோசடி வழக்கில் லண்டனில் உள்ள விடுதியை அமலாக்கத்துறை இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

யூனிடெக் குழுமத்திற்கு எதிரான பண மோசடி வழக்கில் லண்டனில் உள்ள விடுதியை அமலாக்கத்துறை இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது.

யூனிடெக் குழுமத்தின் நிறுவனர்களான சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட பண மோசடி வழக்கில் 58.61 கோடி ரூபாய் மதிப்பிலான லண்டன் விடுதியை அமலாக்கத்துறை இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது.

பிரிட்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் கார்னஸ்டி குழுத்தின் துணை நிறுவனமாக ஐபோர்ன்ஷோர்ன் லிமிடெட் உள்ளது. இந்நிறுவனத்திற்கு சொந்தமான பெட் அண்ட் பிரேக்பாஸ்ட் என்ற விடுதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வீடு வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்துவிட்டதாக யூனிடெக் குழுமத்திற்கு எதிராக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தில்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். வீடு வாங்கி தருவதாக பெற்றுகொண்ட 325 கோடி ரூபாயை கார்னஸ்டி குழுத்தின் வங்கி கணக்கில் மாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த நிதியின் மூலம் ஐபோர்ன்ஷோர்ன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை கார்னஸ்டி குழுமம் வாங்கியுள்ளது. வழக்கு இந்தியாவில் நடைபெற்றாலும் சர்வதேச பண மோசடி ஒத்துழைப்பு வழிகாட்டுதலின்படி அமலாக்கத்துறை இயக்குநரகம் பிரிட்டன் அரசை தொடர்பு கொண்டு நிதியை முடக்கியுள்ளது.

இதுபோன்று, மொத்தமாக 2,000 கோடி ரூபாயை சட்ட விரோதமாக வெளிநாட்டு கணக்குகளில் மாற்றியதாக சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா ஆகியோருக்கு எதிராக அலலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com