சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்  (கோப்புப்படம்)
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் (கோப்புப்படம்)

பஞ்சாப்பை தொடர்ந்து சத்தீஸ்கரில் அதிகார போட்டி: ராகுல் காந்தியுடன் முதல்வர் பூபேஷ் பகேல் மீண்டும் சந்திப்பு

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்கவுள்ளார்.


சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்கவுள்ளார்.

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பகேல், சுகாதாரத்துறை அமைச்சர் டிஎஸ் சிங் டியோ ஆகியோருக்கிடையே அதிகார போட்டி நிலவிவருகிறது. இம்மாதிரியான பரபரப்பான அரசியல் சூழலில் இரண்டாவது முறையாக தில்லிக்கு சென்றுள்ள பூபேஷ் பகேல், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் சத்தீஸ்கர் பொறுப்பாளர் பி.எல். புனியா கூறுகையில், "முதல்வர் பதவி விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டுவருகிறது" என்றார். இதன்மூலம், சத்தீஸ்கரில் அதிகார போட்டி நிலவுவதை காங்கிரஸ் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

பகேலுக்கு ஆதரவான 35 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தில்லி விரைந்துள்ளனர். ராய்ப்பூர் விமான நிலையத்தில் இதுகுறித்து பேசிய பகேல், "ராகுல் காந்தியை சந்திக்க வேண்டும் என எனக்கு நேற்று தகவல் அளிக்கப்பட்டது" என்றார். எம்எல்க்கள் பலர் தில்லிக்கு விரைந்துள்ளனரே என கேள்வி எழுப்பப்பட்டதற்கு, "தங்களின் தலைவரை பார்க்க யார் வேண்டுமானாலும் தில்லிக்கு செல்லலாம்" என்றார்.

தில்லிக்கு சென்ற 35 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் மூவர் அமைச்சர். அதுமட்டுமின்றி, மேலும் 20 எம்எல்ஏக்கள் தில்லிக்கு செல்லவுள்ளனர் எனக் கூறப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளில் முதல்வர் பதவி டியோவுக்கு அளிக்கப்படும் என காங்கிரஸ் தலைமை வாக்குறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தாண்டு ஜூன் மாதத்துடன், முதல்வராக பகேல் பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளாகிறது. எனவே, உறுதி அளித்தப்படி முதல்வர் பதவி தனக்கு அளிக்கப்பட வேண்டும் டியோ அழுத்தம் அளித்துவருவதாகக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com