'காபூல் தாக்குதலை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்' - ஜோ பைடன்

காபூல் தாக்குதலை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 
'காபூல் தாக்குதலை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்' - ஜோ பைடன்

காபூல் தாக்குதலை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூல் விமான நிலையம் அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட இரு தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க கடற்படை வீரா்கள் 12 போ் உள்பட 72 போ் கொல்லப்பட்டனா்; 140-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதக் குழு இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், காபூல் தாக்குதலை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பயங்கவராதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர், 'ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்களை முழுவதுமாக மீட்போம். எங்களுடைய ஆப்கானிஸ்தான் கூட்டாளிகளையும் அங்கிருந்து வெளியேற்றுவோம். எங்களுடைய மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறும். 

காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்தை நாங்கள் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். அதற்குப் பதிலாக எங்கள் படைகளுடன் உங்களை வேட்டையாடுவோம். 

காபூல் விமான நிலையத்தில் நடந்த இந்த தாக்குதலில் தலிபான்களுக்கும் இஸ்லாமிய அரசுக்கும் தொடர்பு இருப்பதாக எந்தவித ஆதாரமுமில்லை' என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்த துயரம் இனி ஒருபோதும் நடக்க அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்தார். 

காபூல் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த கடற்படை வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, அமெரிக்கா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com