
காபூல் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து அமெரிக்காவில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூல் விமான நிலையம் அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட இரு தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க கடற்படை வீரா்கள் 12 போ் உள்பட 72 போ் கொல்லப்பட்டனா்; 140-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதல்களை இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதக் குழுவின் கோரோசான் பிரிவு (ஐஎஸ்கேபி) நடத்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவா் தெரிவித்தார்.
இதையடுத்து, காபூல் குண்டுவெடிப்பில் உயிரிழந்த கடற்படை வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, அமெரிக்காவில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபூலில் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூறும் வகையில் ஆகஸ்ட் 30 மாலை வரை வெள்ளை மாளிகை மற்றும் அனைத்து பொது கட்டிடங்கள், மைதானங்களில் அமெரிக்கக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கப்படும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.