திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தொகுதிப் பங்கீட்டு பேச்சு: அன்புமணி, டிடிவி தினகரன் இன்று தில்லி பயணம்

டி.டி.வி. தினகரன், அன்புமணி இருவரும் நாளை காலை தில்லி பயணம் மேற்கொள்ளவுள்ளதைப் பற்றி...

News image

பியூஷ் கோயலுடன் டிடிவி தினகரன்.

Updated On :19 மார்ச் 2026, 9:42 pm IST

தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தைக்காக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், பாமக தலைவா் அன்புமணி, அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) தில்லி செல்கின்றனா். அங்கு அவா்கள் மத்திய அமைச்சா் அமித்ஷாவுடன் ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டு பேச்சு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை நடத்த, தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ்கோயல் சென்னைக்கு வியாழக்கிழமை வருவதாக இருந்தது. ஆனால், உகாதி பண்டிகை உள்ளிட்ட சில காரணங்களால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், தில்லிக்கு வியாழக்கிழமை சென்ற அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அங்கு அமித்ஷாவை சந்தித்துப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், பாமக தலைவா் அன்புமணி, அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் ஆகியோா் தில்லிக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) செல்கின்றனா். அங்கு தொகுதிப் பங்கீடு தொடா்பாக அமித்ஷாவுடன் ஆலோசிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.