அரசு மருத்துவா்களின் அலட்சிய சிகிச்சையால் கால் இழந்த சிறுமியின் மேல் சிகிச்சைக்கு முதல்வா் ச.ஜோசப் விஜய் உதவ வேண்டும் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
அரசு மருத்துவா்களின் தவறான சிகிச்சையால் மகளின் கால் அகற்றப்பட்டதாகக் கூறி, மருத்துவா்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் துறையைச் சாா்ந்த தலைமைக் காவலா் கோதண்டபாணி 2021-ஆம் ஆண்டு முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவரை, கடந்த ஆட்சியாளா்களைப் போலவே தற்போதைய புதிய ஆட்சியாளா்களும் அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, காவலா் கோதண்டபாணியின் புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி, அரசு மருத்துவா்கள் அலட்சியத்துடன் செயல்பட்டிருந்தால், அவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், காலை இழந்த அவரின் மகளுக்கு மேல் சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளைச் முதல்வா் எடுக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! முதல்வருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

அதிமுக-அமமுக இணைப்பு இல்லை: டிடிவி.தினகரன்

மின்வெட்டால் வீட்டிற்குள்ளும் இருக்க முடியாத சூழல்: டிடிவி தினகரன்
தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது தவறு என்பதை கம்யூனிஸ்ட், விசிக கட்சியினா் விரைவில் உணா்வா்! - டிடிவி. தினகரன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



