நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

தவெக ஆட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்

திருச்சியில் அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்தது குறித்து...

News image

டிடிவி தினகரன் - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

தவெக ஆட்சியின் ஆயுள்காலம் ஊசலாடிக் கொண்டிருப்பதாக அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

மாற்றத்தை விரும்பிய மக்கள் நடந்து முடிந்த தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுத்து ஜனநாயகத்தை காப்பாற்றி உள்ளார்கள்.

த.வெ.க. ஆட்சி குறித்து மூன்று மாதங்களுக்குப் பின் பேசலாம். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அதிமுகவில் சில சலசலப்புகள் நடந்துள்ளது. இதையெல்லாம் கடந்து நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சாதனை படைக்கும்.

காங்கிரஸ், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. அமைச்சராக வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் இதை செய்துள்ளது.

கம்யூனிஸ்ட், விசிக இருவரும் அமைச்சர் கேட்கவில்லை, அப்படி கேட்டிருந்தால் அவர்கள் மானம் போயிருக்கும்.

த.வெ.க.வினர் அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.வை அபகரித்துள்ளார்கள். அதிமுகவை ஊழல் கட்சி, மற்றும் சில கட்சி என ஏளனமாக விஜய் பேசினார். அந்த விஜய்யை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரிப்பது எப்படி நியாயம்?

நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் தொடர்கிறோம். இன்னொரு தேர்தல் வந்து விடும் உள்ளிட்ட காரணங்களை கூறி த.வெ.க.விற்கு சில கட்சிகள் ஆதரவு அளித்தது தர்மத்திற்கு எதிரானது.

த.வெ.க ஆட்சியின் ஆயுள்காலம் ஊசலாகி கொண்டிருக்கிறது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் எடுத்துள்ள விஜய்யை ஆதரிக்கும் முடிவு, அவர்களையே பாதிக்கும்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அமமுக சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சி.பி.ஐ. விசாரணை கோருவோம்

த.வெ.க., அதிமுகவை அழிக்க பார்க்கிறது. இதை அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும். பதவிக்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வை ஆதரித்தால் வரலாறு அவர்களை மன்னிக்காது.

அதிமுகவை அழிக்க த.வெ.க.வின் ஏஜென்டாக செங்கோட்டையன் செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதிமுகவில் நடைபெறும் உள்கட்சி பிரச்சனையைப் பார்த்து பா.ஜ.க. தலைவர்கள் வருத்தப்படுகிறார்கள்.

கட்சி கைவிட்டு போய்விடக் கூடாது என த.வெ.க.வை ஆதரிப்பது அதிமுகவை அழிப்பதற்கு சமம். அதிமுகவிற்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்.

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் கூறும் பொய், அவருக்கு எதிராகதான் திரும்பும். காமராஜ் காரில் அமர்ந்து கையொப்பம் இட்டதை விடியோ எடுத்தது யார் என்பது எனக்கு தெரியும்.

த.வெ.க. செய்தது குதிரை பேரம் தான் என்பதை நிரூபிப்போம். குதிரை வேகத்தில் செயல்படுவோம் என கூறும் விஜய், பேரம் பேசிதான் குதிரையை வாங்கி உள்ளார்” என்றார்.

Summary

AMMK General Secretary TTV Dhinakaran has stated that the lifespan of the DMK government is hanging in the balance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.