ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் எங்கே சென்றார் எனத் தெரியவில்லை அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image

டிடிவி தினகரன் - DNS

Updated On :8 மே 2026, 10:19 pm IST

மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் எங்கே சென்றார் எனத் தெரியவில்லை என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைக்கும்படி அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஆளுநர் அர்லேகரிடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டிடிவி தினகரன் கூறுகையில், மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் இன்று மாலையில் இருந்து எங்கே என்றார் என்று தெரியவில்லை.

எம்எல்ஏ காமராஜை தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தவெகவுக்கு அமமுக ஆதரவு கடிதம் தருவதுபோல் போலியாக கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் குதிரை பேரம் நடத்துகிறார். திமுக தீயசக்தி என்று பேசிவிட்டு அந்த கூடடணி கட்சிகளின் ஆதரவுடன் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்ற அமமுக 11 தொகுதிகளில் போட்டியிட்டு மன்னார்குடி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

தேர்தலில் மன்னார்குடியில் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் 1,566 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

Summary

AMMK General Secretary TTV Dhinakaran has alleged that it is unknown where Mannargudi MLA Kamaraj has gone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.