எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து வரும் ஏப். 6 ஆம் தேதி முதல் அந்தக் கட்சியின் பொதுச் செயலர் டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
அமமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியலை சென்னை அடையாறில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலர் டிடிவி தினகரன் சனிக்கிழமை வெளியிட்டார்.

அதன்படி மடத்துக்குளம் - சி.சண்முகவேலு, சைதாப்பேட்டை - ஜி.செந்தமிழன், திருச்சி மேற்கு - எம்.ராஜசேகரன், பெரியகுளம் (தனி) - கே.கதிர்காமு, ஓட்டப்பிடாரம் (தனி)- இரா.சுந்தரராஜ், பூந்தமல்லி (தனி)- டி.ஏ.ஏழுமலை, மன்னார்குடி- எஸ்.காமராஜ், திருவையாறு- வி.கார்த்திகேயன், காரைக்குடி - தேர்போகி வி.பாண்டி, திருப்பத்தூர் - ஏ.ஞானசேகர், நான்குநேரி - ஆர்.இசக்கிமுத்து ஆகியோா் போட்டியிடவுள்ளனர்.
இந்த நிலையில் அமமுக போட்டியிடும் 11 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வரும் ஏப். 6 ஆம் தேதி முதல் ஏப். 18 ஆம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார்.

அதற்கான தேர்தல் பிரசார சுற்றுப்பயண அட்டவணையை அமமுக தலைமை வெளியிட்டுள்ளது.
வரும் ஏப். 6 ஆம் தேதி சைதாப்பேட்டை தொகுதியில் பிரசாரத்தை தொடங்கும் அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், ஏப். 7-ல் பூந்தமல்லி, ஏப். 8-ல் திருப்பத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு ஏப். 18 ஆம் தேதி மடத்துக்குளம் பேரவைத் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
Summary
AMMK General Secretary TTV Dhinakaran will commence campaigning in support of the party's candidates contesting in the upcoming Legislative Assembly elections starting April 6.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக ஆட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்

த.வெ.க.வை ஆதரித்துக் கையெழுத்திட்ட அமமுக எம்எல்ஏ! டிடிவி சொல்வது உண்மையா?
அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

தவெகவுக்கு ஆதரவில்லை; அமமுகவின் எம்எல்ஏ புதுச்சேரி விடுதியில் உள்ளார்! - டிடிவி தினகரன் அறிவிப்பு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




