கோவை அருகே சூலூர் சிறுமி கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண்களின் பாதுகாப்பு விவகாரத்தில் தனி கவனம் செலுத்தவேண்டும் என்று சனிக்கிழமை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை சூலூா் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி கடத்தப்பட்ட நிலையில், அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது:
கோவை மாவட்டம் சூலூர் அருகே 9 வயது சிறுமி கொடூரமான முறையில் படுகொலை: மனிதநேயமற்ற மிருகங்கள் மீது சமரசமற்ற முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்து குளக்கரையில் வீசப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மட்டுமல்லாமல் சமூகத்தின் அடிப்படை மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கும் அவலநிலையை ஏற்படுத்தியுள்ளன. எனவே,கொடூரமான முறையில் சிறுமியைக் கொலை செய்த மனிதநேயமற்ற மிருகங்களைக் கைது செய்து அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் தனி கவனம் செலுத்தவேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
In a post regarding the brutal murder of a young girl in Coimbatore, TTV Dhinakaran emphasized on Saturday (May 23) that special attention must be paid to the safety of women.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுகவின் முதுகில் குத்திய வைகோ: டிடிவி தினகரன்

நெருக்கமானவர்களுக்கு அரசு உயர் பதவி: வெங்கட நாராயணா விவகாரத்தில் டிடிவி தினகரன் கண்டனம்

பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! முதல்வருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் மயக்கம்: தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
விடியோக்கள்

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna




