திமுகவின் முதுகில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குத்திவிட்டதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
அமமுக செய்தியாளர்கள் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது, "மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எனக்கு பிடித்த அரசியல் தலைவர்.
ஆனால், 9 ஆண்டுகளாக நிர்பந்தத்தில் இருந்ததாகவும், அவர்களை நிர்பந்தப்படுத்தி சின்னத்தில் (உதயசூரியன்) நிற்கச் சொன்னதாக அவர் கூறி, அவருடைய தரத்தை அவரே குறைத்துக் கொள்கிறார்.
நிர்பந்தப்படுத்தியிருந்தால், அன்றைக்கே வெளியேறியிருக்கலாம், தனித்துப் போட்டியிட்டு இருக்கலாம். தேர்தலில் போட்டியிடாமலும் அவர் இருந்திருக்கிறார். அவர் இப்போது சொல்வது முதுகில் குத்துவதுதான்.
திமுகவின் ஆதரவில் இருந்தபோது, விஜய் குறித்து அவர் என்னவெல்லாம் பேசினார். தேர்தல் முடிந்தபிறகும், தவெகவினர் என்னை அணுக மாட்டார்கள் என்று சொன்னவர்தான் வைகோ.
மதிமுக எம்எல்ஏ-க்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால், அவர்களும் திமுக உறுப்பினர்களே. திமுக கொறடா சொல்வதைத்தான் அவர்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்ற முடியும்.
அவர்கள் இருவரையும் ராஜிநாமா செய்யுமாறு விஜய் சொன்னதாகவும், அவர்களுக்கு தானே பிரசாரம் செய்வதாகக் கூறுவதும் உறுதியாக குதிரை பேரம்தான். இதனை யாரும் மறுக்க முடியாது" என்று தெரிவித்தார்.
Summary
TTV Dhinakaran criticized MDMK Leader Vaiko for stabbing the DMK in the back
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெருக்கமானவர்களுக்கு அரசு உயர் பதவி: வெங்கட நாராயணா விவகாரத்தில் டிடிவி தினகரன் கண்டனம்

முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!

பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! முதல்வருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

மின்வெட்டால் வீட்டிற்குள்ளும் இருக்க முடியாத சூழல்: டிடிவி தினகரன்
விடியோக்கள்

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK


